ட்ரம்பிற்கு நகர முடியாமல் விழும் தொடர் அடிகள்: ஒன்று சேர்ந்த 12 மாநிலங்கள்!
உலகளாவிய வர்த்தகத்தை உலுக்கியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தொடர்ச்சியான வரிகளைத் தடுக்கும் நோக்கில் 12 அமெரிக்க மாநிலங்கள் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்துள்ளன.
குறித்த வழக்கானது, அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, இந்த வழக்குகள் ஓரிகான், அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், இல்லினாய்ஸ், மைனே, மினசோட்டா, நெவாடா, நியூ மெக்ஸிகோ, நியூயார்க் மற்றும் வெர்மான்ட் ஆகிய மாநிலங்களே இவ்வாறு ட்ரம்ப நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன.
அதிகாரம் இல்லாத ட்ரம்ப்
நியூயார்க்கின் ஆளுநரும் அட்டர்னி ஜெனரலும் தலைமையிலான இந்த வழக்கு, ஜனாதிபதிக்கு ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என்றும் அத்தகைய வரிகளை அமெரிக்க காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகிறது.
இந்த நிலையில், ட்ரம்பின் வரிகள் சட்டவிரோதமானது என்றும் அவை அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிநாட்டு இறக்குமதிகள் மீதான வரிகளை சட்டப்பூர்வமாக எதிர்த்த முதல் மாநிலமாக கலிபோர்னியா அண்மையில் பதிவாகியிருந்தது.
வரி விதிப்பு
கடந்த இராண்டாம் திகதி (ஏப்ரல்) உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது "பரஸ்பர" வரிகளை அறிவித்து ட்ரம்ப் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியிருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு சந்தை எதிர்ப்புகளுக்கு மத்தியில், அவர் வரிகளில் 90 நாள் இடைநிறுத்தத்தை அறிவித்து, சீனாவை தவிர பெரும்பாலான நாடுகளுக்கு வரி வீதத்தை 10 ஆக குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
