இரண்டு அமெரிக்க பணயகைதிகளை விடுவித்தது ஹமாஸ் (காணொளி)
ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் நாட்ற்குள் புகுந்து தாக்குதல் நடத்தில் 200 ற்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற ஹமாஸ் அமைப்பு இரண்டு அமெரிக்க பணயக்கைதிகளை விடுவித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய் மற்றும் அவரது மகள் ஆகிய இரு அமெரிக்க பிரஜைகளே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நண்பர்கள் வீட்டிற்கு இவர்கள் வந்த வந்த வேளை
காஸா பகுதிக்கு அருகாமையில் உள்ள இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள தமது நண்பர்கள் வீட்டிற்கு இவர்கள் வந்த வந்த வேளை இடம்பெற்ற ஹமாஸ் நடவடிக்கையில் இவர்கள் கடத்தப்பட்டனர்.
பணயக்கைதிகள் எப்படி எப்போது விடுவிக்கப்பட்டனர் என்பதை ஹமாஸ் அமைப்பு அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஹமாஸால் கடத்தப்பட்டவர்களில் பலர் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
5500க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் சிறார்களாக உள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பமான பலஸ்தீன இஸ்ரேல் மோதலில் 5500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.