கனடா மோகத்தால் ஏற்பட்ட விளைவு: யாழ்பாணத்தை சேர்ந்த இருவர் உட்பட நால்வர் கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Canada
By Dilakshan
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கனடா (canada) செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய (Bandaranaike International Airport) அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, சந்தேக நபர்களுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்கிய யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இருவர் நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கடவுச்சீட்டு விவகாரங்கள்
இந்நிலையில், அண்மைக்காலமாக போலி கடவுச்சீட்டு விவகாரங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன.
இதன்போது, போலி கடவுச்சீட்டு முகவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்பாடு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |