விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டிப் பெண்ணை கடத்த முயற்சி: இருவர் கைது
விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி பெண் ஒருவரைக் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்தைக் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டுத் துப்பாக்கி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மத்தேகொட, கிரிகம்பமுனுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் இந்த விளையாட்டுத் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சந்தேகநபர்கள் இருவரும் அங்கிருந்த இளம் பெண்ணைக் கடத்த முயன்றுள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த மற்றொருவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அவர்கள் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மத்தேகொட காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு
இதன்பின்பு கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கல்கிசை பகுதியில் வைத்து விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் காருடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தச் செயல் இடம்பெற்றுள்ளதாகக் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் சந்தேகநபர்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் காரைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |