போதைப்பொருளை விழுங்கிய இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
யாழில் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விழுங்கிய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுழிபுரம் - கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை காவல்துறையினர் நேற்று (12) 2 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுப்புக் காவலில் வைத்திருந்தனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
இந்நிலையில் இன்று காலை அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் தன்னை கைது செய்ய வரும்போது 10 கிராம் எடையுடைய ஹெரோயினை பொலித்தீன் பையுடன் விழுங்கிய விடயத்தைக் கூறியுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் அவரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ள நிலையில் குறித்த இளைஞனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த இளைஞன் இதற்கு முன்னரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றதாக காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |