சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு: இருவர் கைது!
Sri Lanka Police
Nuwara Eliya
Crime
By Laksi
மஸ்கெலியா(Maskeliya)காவல்துறை பிரிவிற்குற்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(8) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மஸ்கெலியா காவல்துறையினார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி