யாழில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது
யாழில் (Jaffna) திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி காவல் பிரிவுக்குற்பட்ட சங்கத்தானை மடத்தடியில் உள்ள வீட்டில் நேற்று முன் தினம் (15) இரவு இடம் பெற்ற திருட்டுச்சம்பவம் தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், நேற்று முன் தினம் (15) இரவு வீட்டில் யாரும் இல்லாத வேளை வீட்டில் இருந்த தொலைகாட்சி உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
குழுவினர் விசாரணை
இது குறித்து அன்றைய நாள் இரவே வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சாவகச்சேரி காவல் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதையடுத்து, நேற்று (17) இரவு குடத்தனை பொற்பதி பகுதியில் உள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட பொருட்களுடன் அதே பகுதியை சேர்ந்த 24 மற்றும் 28 வயதான இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

