யாழில் போதைபொருளுடன் இருவர் சுற்றிவளைப்பு...!
யாழில் போதைபொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை, இன்பருட்டி கடற்கரைப் பகுதியில் நேற்று (14) இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின் போது 28 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இராணுவத்தினர் மற்றும் பருத்தித்துறை காவல்துறையினர் இணைந்து முன்னெடுத்த இந்த நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட 28 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பருத்தித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பருத்தித்துறை காவல் நிலைய தலைமை காவல்துறை பொறுப்பதிகாரி பிரயந்த அமரசிங்க தலைமையிலான குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |