சம்மாந்துறையில் காவல்துறையினரின் சுற்றிவளைப்பு...! இருவர் கைது
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை சம்மாந்துறை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (30-09-2026) இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தலா 2 கிராம் வீதம் மொத்தம் 4 கிராம் ஐஸ் போதைப்பொருள் சம்மாந்துறை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 28 வயதுடைய சந்தேகநபர் சம்மாந்துறை மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
இவர் ஏற்கனவே பல முறை போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பழைய குற்றவாளி என காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சட்ட நடவடிக்கை
அதேவேளை கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர் வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இவ்விரு சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக தீவிர விசாரணைகளைச் சம்மாந்துறை காவல்துயைினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |