லொக்கு பெட்டியின் நெருங்கிய சகாக்கள் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'லொக்கு பெட்டியின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரகஸ்மன்ஹந்திய மற்றும் இந்துருவ பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்தை அலுத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 26 இலட்சம் ரூபாய் பணம், ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளது.

சந்தேக நபர்கள் 'Easy Cash'முறை மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வங்கி அறிக்கைகள் மற்றும் தொலைபேசி அறிக்கைகளைப் பெற்று மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுத்துவைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. அலுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |