இரண்டு அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் மீது இந்தியாவில் பாலியல் அத்துமீறல்
ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இந்தியா வந்த இரண்டு அவுஸ்திரேலிய வீராங்கனைகள், வியாழக்கிழமை மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் தங்கள் ஹோட்டலில் இருந்து ஒரு ஹோட்டலுக்கு நடந்து செல்லும்போது பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் கடந்த வியாழக்கிழமை (23) இந்தியாவின் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றில் இருந்து அருகிலுள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு நடந்து சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறல்
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில், கண்காணிப்புக் கமராக்கள், அருகில் இருந்தவர்கள் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் அகில் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் வருத்தம்
இந்தச் சம்பவத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்