பசிலுக்கு விழுந்த பாரிய அடி - நிதியமைச்சு எடுத்த நடவடிக்கை
Parliament of Sri Lanka
Basil Rajapaksa
Sri Lanka Economic Crisis
Ministry of Finance Sri Lanka
By Sumithiran
பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளன.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த யோசனைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவு.
4,917 உள்ளூராட்சி சபைகளுக்கு தலா 4 மில்லியன் ரூபாய் என மொத்தம் 19.67 பில்லியன் என்பது இடைநிறுத்தப்படும் முதவாவதுபிரேரணையாகும்.
அத்துடன் கிராமப்புற சமூக மேம்பாட்டுக்கான 85 பில்லியன் நிதி ஒதுக்கீடும் நிறுத்தப்படும்.
தற்போது பெரும் சுமையாகக் காணப்படும் உள்ளுராட்சி நிறுவனங்கள் உட்பட நாட்டின் பொதுத்துறை முழுவதும் சாத்தியமான செலவினக் குறைப்புகளை மீளாய்வு செய்வதற்கு ஏற்ப நிதி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மரண அறிவித்தல்