அதிகாலைவேளை வர்த்தகரின் வீட்டில் நிகழ்ந்த அனர்த்தம் -தீவிர விசாரணையில் காவல்துறை(படங்கள்)
Sri Lanka Police
By Jaso
வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிலாபம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (03) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற தீ வைப்புச் சம்பவம் தொடர்பில் புளியங்கடவர, முகுனுவடவன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தம் கேட்டு அவரும் குடும்பத்தினரும் எழுந்து பார்த்தபோது, தனது வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு யாரோ ஒருவர் தீ வைத்ததைக் கண்டதாகவும் இதனால் சுமார் 8 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்தார்.


மரண அறிவித்தல்
நன்றி நவிலல்