ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன சிறுவர்கள் மீட்பு!
Found
Two children
Nihal Taltuwa
Mirigama
Last year
By MKkamshan
கடந்த ஆண்டு காணாமல் போன சிறுவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீரிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவர்கள் வெரஎலிஎந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு வருகைத் தந்திருந்த சந்தர்ப்பத்திலேயே, கண்டுபிடிக்கப்பட்டு பெண்ணொருவரினால் மீரிகம காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மீரிகம காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இரண்டு சிறுவர்களும், மேலதிக விசாரணைகளுக்காக கொட்டதெனியாவ காவல்துறையினரிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 23ம் திகதி 10 மற்றும் 12 வயதான உறவு முறை சகோதரர்கள் இருவரே இவ்வாறு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி