எல்டோ தர்மேவின் நெருங்கிய இரு சகாக்கள் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Drugs
By Pavi
வெளிநாட்டில் இருந்தவாறு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தி வரும் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான 'எல்டோ தர்மே' என்பவரின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 06 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மேலும் தகவல்களை கண்டறிய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் (03.10.2026) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்