கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த இருவர் யாழில் கைது
Sri Lanka Police
Colombo
Jaffna
Tamil nadu
Arrest
By Theepan
கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி வீடொன்றில் 19.25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.
அது தொடர்பில் வீட்டார் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை
இந்நிலையில் குறித்த வீட்டில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவரை யாழ்ப்பாணத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் , அவர்களை கொட்டாஞ்சேனை காவல்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்