சிறைச்சாலையில் பன்றி இறைச்சி உட்கொண்ட கைதிகளுக்கு நேர்ந்த அவலம்
கொழும்பு (colombo) மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் பன்றி இறைச்சி உட்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
ஐஸ் போதைப்பொருளுடன் பொரளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கைதிகள் உயிரிழப்பு
வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவுப் பொதியை கைதியொருவரும் மேலும் 15 கைதிகளும் உட்கொண்டுள்ளனர். இவ்வாறு உட்கொண்டவர்களில் மூன்று கைதிகள் நோய் வாய்ப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
பன்றி இறைச்சியினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த உணவை உட்கொண்ட மேலும் 13 பேருக்கு எவ்வித நோய் நிலைமைகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க (Gamini Dissanayake) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |