பரிதாபமாக பலியான இளம் தம்பதி! காவல்துறை விசாரணை
ஹொரணை - மொரகஹஹேன வீதியில் கனன்வில விகாரைக்கு அருகிலுள்ள வளைவில் இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி மோதியதில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மொரகஹேன, பெரெகெட்டிய பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய பூர்ண மனுஷ்க மற்றும் சதுரிகா அப்சரா என்ற தம்பதியினரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறியும், ஹொரணையிலிருந்து மொரகஹேன நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் ஹொரணை-மொரகஹேன பிரதான வீதியில் இன்று மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
வளைவில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறப் பாதையில் பயணித்த லொறியுடன் மோதியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள் பலத்த காயமடைந்த தம்பதியினரை மருத்துவமனையில் அனுமதிக்கும் போதே அவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹொரணை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
