தொடருந்து விபத்தில் சிக்கிய குடும்பம்: இருவர் பலி - பலர் படுகாயம்

Galle Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Nov 15, 2024 11:40 PM GMT
Report

மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்துடன் சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது, வெலிகம பொல்அத்த பகுதியில் நேற்று (15) இரவு தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய நால்வரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் நடந்த எதிர்பாராத விடயம்: அநுர தரப்பு வெளிப்படை

தேர்தலில் நடந்த எதிர்பாராத விடயம்: அநுர தரப்பு வெளிப்படை


விபத்து

தொடருந்து வருவதாக சமிஞ்ஞைகள் ஒளிரும் வேளையில் அருகில் இருந்தவர்கள் எச்சரித்ததையும் மீறி லொறி தொடருந்து கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடருந்து விபத்தில் சிக்கிய குடும்பம்: இருவர் பலி - பலர் படுகாயம் | Two Killed In Train Accident Galle

சம்பவத்தில் லொறியின் சாரதியான 34 வயதான திலிப பெரமுனகே மற்றும் அவரது தாத்தா பி.கே. சுகததாச என்பவருமே உயிரிழந்துள்ளனர்.

மனைவி கவலைக்கிடம்

காயமடைந்தவர்களில் உயிரிழந்த சாரதியின் 01 மற்றும் 07 வயதுடைய இரு பிள்ளைகள், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் தாயார் ஆகியோர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தொடருந்து விபத்தில் சிக்கிய குடும்பம்: இருவர் பலி - பலர் படுகாயம் | Two Killed In Train Accident Galle

இந்த நிலையில், 34 வயதான மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

புதிய அமைச்சரவையை அமைக்க தயாராகும் அநுர அரசாங்கம்

புதிய அமைச்சரவையை அமைக்க தயாராகும் அநுர அரசாங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்