யானை : மனித மோதலைக் கட்டுப்படுத்த புதிய திட்டங்கள்

Sri Lanka Sri Lankan Peoples Elephant
By Laksi May 21, 2024 07:00 PM GMT
Report

 காட்டு யானை - மனித மோதல் அதிகம் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்க, தற்காலிக விவசாய மின் வேலி மற்றும் கிராம மின் வேலி என்ற இரண்டு மாதிரித் திட்டங்களைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.

காட்டு யானை - மனித மோதல்களைக் கட்டுப்படுத்த அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (20) நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

யாழில் தொடர் மழையால் பெரும் பாதிப்பு!

யாழில் தொடர் மழையால் பெரும் பாதிப்பு!

 மின்வேலி

இங்கு யானை – மனித மோதல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த மோதல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படும் மின்சார வேலிக்கு மேலதிகமாக, மோதல்கள் அதிகம் இடம்பெறும் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னோடித் திட்டமாக விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யானை : மனித மோதலைக் கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் | Two Model Plans To Curb Human Elephant Conflict

அறுவடை மேற்கொள்ளப்படும் சமயம் வரை மாத்திரம் உரிய விவசாய நிலங்களைப் பாதுகாக்க தற்காலிக விவசாய மின்வேலி அமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், காட்டு யானை - மனித மோதல்கள் அதிகம் உள்ள கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில் கிராமத்தைச் சுற்றி அமைக்கப்படவுள்ள மின்வேலிக்கான முன்னோடித் திட்டம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட விவசாயிகள் விவசாய பணிகளைத் தொடங்கும் நேரத்தில் அறுவடை செய்த பின் விவசாய மின் வேலியை அகற்ற வேண்டும் எனவும், மின்வேலியின் பராமரிப்பு மற்றும் பொறுப்பை கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு வழங்குவதுடன், கிராம வேலியின் பொறுப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு வழங்குவது எனவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி 3 ஆண்டுகள்: போராட்டத்தில் கடற்றொழிலாளர்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி 3 ஆண்டுகள்: போராட்டத்தில் கடற்றொழிலாளர்கள்

 அதிகாரிகளுக்குப் பணிப்புரை

பல்வேறு கலாசார நிகழ்வுகள் மற்றும் பெரஹரா என்பவற்றுக்காக யானைகளை வழங்குகையில் தனியாரிடமுள்ள யானைகளுக்கு மேலதிகமாக, பழக்கப்பட்ட யானைகளைக் கொண்ட பட்டியலொன்றைப் பேணுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

யானை : மனித மோதலைக் கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் | Two Model Plans To Curb Human Elephant Conflict

இந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் எழும் சிக்கல்கள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்குக் (Ranil Wickremesinghe) கையளிப்பதற்காகத் தயார்படுத்துமாறும் சாகல ரத்தாயக்க (Sagala Ratnayaka) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.

வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் காட்டு யானைகள் மனிதக் கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினர்களான கலாநிதி சுமித் பிலபிட்டிய, கலாநிதி பிரிதிவிராஜ் பெர்னாண்டோ ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். 

யாழிலுள்ள பழமையான வைத்தியசாலைக்கு சர்வதேச விருது!

யாழிலுள்ள பழமையான வைத்தியசாலைக்கு சர்வதேச விருது!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015