மட்டக்களப்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
குறித்த வேட்பு மனுக்களை தாக்கலை இன்று புதன்கிழமை(09.10.2024) செய்துள்ளனர்
மக்கள் போராட்ட முன்னணி கட்சியினர் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட செயலகத்தில் கட்சியின் தலைமை வேட்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தலைமையில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல்
இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (G. Karunakaran)தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் சங்கு சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
மாவட்டத்தில் 3 சுயேச்சை குழுக்களும் 4 அரசியல் கட்சியும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சுபியான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
















ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 23 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்