யாழில் நூதன முறையில் திருட்டு : இருவர் கைது!
யாழ்ப்பாண நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் எரிவாயு சிலிண்டர்கள் திருடிய இருவர் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பத்திற்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண குற்றதடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள்
கைது செய்யப்பட்டவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் போதைப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காகவே எரிவாயு சிலிண்டர் திருடியதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் குரு நகர் பகுதியில் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாண காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமச்சந்திர தலைமையிலான காவல்துறையினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்