மட்டக்களப்பில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்
மட்டக்களப்பு, ஏறாவூர் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏறாவூர் முதலாம் பிரிவு - இளையவன் , வீதியில் நேற்று (23.03.2026) இரு குழுவினர் இடையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாள்வெட்டு சம்பவம்
இரு தினங்களுக்கு முன்தினம் இடம்பெற்ற கண்காட்சியில் குறித்த இரு குழுக்கள் இடையிலே ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து நடந்த வாள்வெட்டு சம்பவத்தில், இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு 9:00 மணியளவில், ஒரு குழு ஒன்று வீட்டு தேடி சென்று வாளால் வெட்டு தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |