சிறிது நேரத்தில் அரசு பக்கம் தாவப்போகும் சஜித்தின் இரண்டு எம்.பிக்கள்
SJB
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Government Of Sri Lanka
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) இரண்டு எம்.பி.க்கள் டொலர்களில் வெகுமதிகளை பெற்று சிறிது நேரத்தில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று அந்த கட்சியின் எம்.பி ஒருவர் இன்று தெரிவித்தார்.
கம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி ஒருவரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொருவரும் விரைவில் அரசாங்கத்திற்கு செல்லவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(Harshana Rajakaruna )ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பண வெகுமதிகள்
"இந்த அரசியல் விபச்சாரிகள் அமெரிக்க டொலர்களில் பண வெகுமதிகள் உட்பட சலுகைகளுக்கு வீழ்ந்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

பலர் எதிர்க்கட்சிக்கு வர தயார்
"நாம் ஒரு சில எம்.பி.க்களை மட்டுமே இழக்கப் போகிறோம், ஆனால் பலர் தங்கள் பதவிகளை விட்டுக்கொடுத்து எதிர்க்கட்சிக்கு செல்ல தயாராக உள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்