43 வயதான ஆணொருவர் உட்பட இருவர் உயிரிழப்பு
Death
Covid-19
Patient
By Vasanth
இலங்கையில் மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு 15 மற்றும் ஹொரணை − கோனபொல பகுதிகளைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆணொருவர், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹொரணை − கோனபொல பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண்ணொருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி