போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த ரணில் : அதிரடியாக வழங்கிய உத்தரவு
முல்லைத்தீவு (Mullaitivu), கேப்பாப்பிலவில் (Keppapilavu) போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவை பிறப்பித்தார்.
அதிபர் இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் "உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்துக்குச் சென்றபோது அதிபரைச் சந்திக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இது குறித்து அறிந்த வட மாகாண ஆளுநர் பி. எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) , இரு பெண்களும் இருந்த இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினை தொடர்பாக வினவ, அதன்போது அவர்களின் பிரச்சினையை அதிபரிடம் முன்வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களின் பிரச்சினைகள்
இந்த நிலையில், அதிபர் ரணில் விக்கிரமசிங்க போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார் என கூறப்பட்டுள்ளது.
காணிப் பிரச்சினை காரணமாக தாம் உட்பட கேப்பாப்பிலவு கிராமத்தில் வசிக்கும் 56 குடும்பங்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எனவே இதற்கு உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறும் அந்த பெண்கள் அதிபரிடம் வேண்டுகோள் விடுத்ததாக குறிப்பிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
இதுகுறித்து பதிலளித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, “இந்தப் பிரச்சினையை விரைவாகக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கவுள்ளது.
மேலும், வட மாகாணத்தில் பெருமளவிலான காணிகளை விடுவிக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எஞ்சியுள்ள காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதே தமது எதிர்பார்ப்பு” எனவும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |