மூலோபாய வலயத்தினுள் சிறிலங்கா - நகர்வை ஆரம்பித்தது அமெரிக்கா
பூகோள அரசியல் முக்கியத்துவம் காரணமாக சிறிலங்காவுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றாலும் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்க அமெரிக்கா முயலும் என சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள ஜூலி சுங் (Juli Sung) குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடனால் (Joe Biden) சிறிலங்காவுக்குரிய புதிய அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட மூத்த அமெரிக்க இராஜதந்திரியான ஜூலி சுங், நேற்று அமெரிக்க காங்கிரசின் வெளியுறவுக்குழு உறுப்பினர்களின் அங்கீகாரத்தை பெறுவதற்குரிய அறிக்கையிடலை செய்திருந்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தனது பணிக்காலத்தில் மேற்கொள்ளவுள்ள செயற்திட்டங்கள் குறித்து வெளியுறவுக்குழுவுக்கு விளக்கமளித்த அவர், இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியின் மூலோபாய அமைவிடத்தில் உள்ள சிறிலங்கா, அமெரிக்காவுக்கு எப்போதும் அவசியமானது எனத் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேரச் செய்திகளின் தொகுப்பு,