பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்கா செல்லும் உதய கம்மன்பில!
அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை கேட்டு சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotabaya Rajapaksa) எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதிவரை அமெரிக்காவில் நடக்கவுள்ள இந்து பசிபிக் வலய எரிசக்தி அமைச்சர்கள் பங்குகொள்ளும் 5ஆவது வருடாந்த செயலமர்வில் கலந்துகொள்ள எதிர்பார்க்கின்றார்.
உதய கம்மன்பில அமெரிக்கா சென்றவுடன் அப்பதவியில் பதில் அமைச்சராக டலஸ் அழகப்பெரும (Dullas Alagaperuma) செயற்படவுள்ளார்.
இதேவேளை கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீதப் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்று வாங்குவது சம்பந்தமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதோடு அதற்கெதிராக நாட்டில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ள நிலையிலேயே அமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
