பறிக்கப்படுகிறது உதய கம்மன்பிலவின் அமைச்சுப் பதவி?
minister
gotabaya
udaya-gammanpila
By Vanan
எரிசக்தி அமைச்சர் பதவியிலிருந்து உதய கம்மன்பிலவை நீக்குவதற்கான தீர்மானம் ஜனாதிபதியினால் எட்டப்பட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில், அண்மையில் எரிபொருள் விலையேற்றத்தை மேற்கொண்ட காரணத்திற்காக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்ப்பலைகள் ஏற்பட்டன.
இதனால் எரிசக்தி அமைச்சர் பதவியிலிருந்து உதய கம்மன்பிலவை நீக்கி, அவருக்கு இன்னுமொரு அமைச்சு இந்த மாதத்திற்குள் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அவருக்கெதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி