அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே சண்டையிடுவது ஏன்? வெளியானது அறிவிப்பு
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவே தற்போது அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய வாக்குறுதியை தானும் அமைச்சர் விமல் வீரவன்சவும் நிறைவேற்றி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“இந்த நாட்களில் நாங்கள் அரசாங்கத்துடன் சண்டையிடுவதை மக்கள் பார்க்கிறார்கள். ஆம், இந்த நாட்களில் நாங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்துடன் போராடுகிறோம்.
ஜூலை 18, 2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமைச்சர் விமல் வீரவன்சவும் நானும் எங்கள் வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இல்லை அமைச்சர்களும் அல்ல. எமது அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அப்பால் சென்று மக்களின் அபிலாஷைகளை புறம் தள்ள முற்பட்டால், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்குள் எதிர்க்கட்சியாக செயற்படுவோம் என எழுத்து மூலமான உறுதிமொழியை நாட்டுக்கு வழங்கினோம்.
அந்த தேர்தல் வாக்குறுதியை இன்று நிறைவேற்றுகிறோம். அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே 20ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளகக் கலந்துரையாடல் இன்றி நிறைவேற்றப்பட்ட போது, இதுவே முதல் கூட்டம் என்று நினைக்காமல் அதற்கு எதிராகப் போராடினோம்.
ஏனெனில் தேர்தல் வாக்குறுதியை மக்களுக்கு நிறைவேற்றுவதற்காகவே அதனைச் செய்தோம்.
முத்துராஜவெல பிரதேசத்தில் இன்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.