வரலாற்றில் முதன்முறையாக டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் கால் பதிக்கிறது உகாண்டா!
ஐசிசி ஆடவருக்கான 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையில் விளையாடும் ஐந்தாவது ஆபிரிக்க நாடு என்ற பெருமையை உகாண்டா பெற்றுள்ளது.
அதுமாத்திரமல்லாமல் ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் உகாண்டா பங்கேற்கும் முதல் போட்டியும் இதுவாகும்.
ஐசிசி ஆடவருக்கான 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவதற்காக நடாத்தப்பட்ட 06 போட்டிகளில் 05 இல் வெற்றியைப் பெற்று தனக்கான வாய்ப்பினை உகாண்டா உறுதி செய்துள்ளது.
அமோக வெற்றியைப் பெற்றது
தகுதிச் சுற்றில் உகாண்டா தனது முதல் ஆட்டத்தில் தான்சானியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, அடுத்த ஆட்டத்தில், நமீபியாவுடனான ஆட்டத்தில் 4/17 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
அதன் பின்னர் ஜிம்பாப்வே, நைஜீரியா,கென்யா,ருவாண்டா ஆகிய ஆணிகளுடனான ஆட்டங்களில் அமோக வெற்றியைப் பெற்ற உகாண்டா ஐசிசி ஆடவருக்கான 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.
மறுபுறம், நமீபியா மற்றும் உகாண்டா அணிகளுடன் விளையாடி தோல்வியைத் தழுவிய ஜிம்பாப்வே அணி, டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினைத் தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.