பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதி வசதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களிடையே நிலவும் தங்குமிட வசதிகளுக்கான கடும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் புதிய விடுதிகள் மூலம் குறைந்தது 2,400 மாணவர்கள் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி அமைச்சின் மேற்பார்வை
இந்தத் திட்டம் கல்வி அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குச் சிறந்த வாழ்க்கைச் சூழலை வழங்குவதன் மூலம், அவர்களின் கல்விசார் அனுபவங்களையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.
தற்போது பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய விடுதி வசதிகள் மாணவர்களின் தங்குமிடப் பிரச்சினைகளுக்குப் பெரும் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |