பிரித்தானிய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஆறுதலளிக்கும் தகவல்
முதன் முறையாக பிரித்தானியாவில் கொரோனா மரணங்கள் பூச்சியத்தில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மரண விபரங்களை இன்றைய தினம் அந்நாட்டு சுகாதார பிரிவு வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றைய தினம் அங்கு எந்தவித கொரோனா மரணங்களும் பதிவாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய சுகாதார செயலாளர் மட் ஹான்கா தகவல் வெளியிடுகையில், நாட்டு மக்கள் அனைவரும் இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைவார்கள்.
தடுப்பூசிகள் மிக விரைவாக செயல்படுகின்றன. ஆனாலும், கொரோனா வைரஸை வெற்றிகொள்ளவில்லை. எனவே பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கான அறிகுறிகளின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.