இலங்கைக்காக அடுத்தடுத்து உதவ முன்வரும் சர்வதேச நாடுகள்
Sri Lanka
United Kingdom
Climate Change
Weather
Floods In Sri Lanka
By Shalini Balachandran
பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 890,000 அமெரிக்க டொலர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கம்
குறித்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அமைப்பு மற்றும் உள்ளூர் பங்காளிகளுடன் இணைந்து அவசரப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |