மீண்டும் பணியை ஆரம்பித்த இளவரசர் வில்லியம் !
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ்க்கான புற்றுநோய் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இளவரசர் வில்லியம் இன்று பொது நிகழ்வுகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
தனது மனைவி கத்தரின் அண்மையில் சத்திர சிகிச்சைக்கு உட்பட்டதையடுத்து, வில்லியம் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்திருந்தார்.
இந்த நிலையில், விண்ட்சர் கோட்டையில் இன்று இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் சில நாட்களுக்கு பின்னர் பிரித்தானிய இளவரசர் பங்கேற்றுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமை பக்கிங்காம் அரண்மனை அறிவித்ததது.
A statement from Buckingham Palace: https://t.co/zmYuaWBKw6
— The Royal Family (@RoyalFamily) February 5, 2024
? Samir Hussein pic.twitter.com/xypBLHHQJb
இதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னர் பொது நிகழ்வுகளில் பங்கேற்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், அரசியலமைப்புக்கு ஏற்ப மன்னரின் கடமைகளை அவர் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பொது நிகழ்வுகள்
இந்த நிலையில், மன்னர் சார்ல்ஸ்க்கு பதிலாக பொது நிகழ்வுகளில் இளவரசர் வில்லியம் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
மூன்று வாரங்களின் பின்னர், முதல் பொது நிகழ்வில் இன்று இளவரசர் பங்கேற்றுள்ளார்.
இதேவேளை, மன்னரின் சிகிச்சைகள் தொடரும் காலப்பகுதியில் அதிகவான பொது நிகழ்வுகளில் வில்லியம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |