பிரித்தானியாவில் இருந்து ருவாண்டா அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்: திறந்த சிறை எனும் ஈழத்தமிழர்கள்

Refugee Sri Lanka Refugees Rwanda
By Aadhithya Jun 08, 2024 12:17 PM GMT
Report
Courtesy: BBC

ஒரு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய (Britain) அரசாங்கத்தால், தொலைதூர பிரதேசமான டியாகோ கார்சியாவில் இருந்து ருவாண்டாவிற்கு (Rwanda) அனுப்பப்பட்ட இலங்கை (Sri Lanka) தமிழர்கள், தாம், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

ருவாண்டா என்ற இந்த ஆபிரிக்க நாட்டை அவர்கள் திறந்த சிறை என்று விபரிப்பதாக கூறப்பட்டுள்ளதுடன் இங்கிலாந்தில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய உடன்படிக்கை தொடர்பில் இங்கிலாந்தின் அரசியல் கட்சிகள் பிளவுபட்டுள்ளன.

கையொப்பமிடப்படாத இராஜதந்திர குறிப்புகளைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதுடன் தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் கீழ் இந்தத் தகவல்களை வெளியிடுவது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச  ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

யாழில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: பெண்ணின் கழுத்தை நெரித்து தாக்குதல்

யாழில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: பெண்ணின் கழுத்தை நெரித்து தாக்குதல்

மருத்துவத் தேவைகள் 

இந்த நிலையில், சர்வதேச ஊடகம் ருவாண்டாவுக்கு சென்று அங்குள்ள புலம்பெயர்ந்த நான்கு தமிழர்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளதுடன் இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில் இருந்து அனுப்பப்பட்ட தமக்கு சிக்கலான மருத்துவத் தேவைகள் ருவாண்டாவில் பூர்த்தி செய்யப்படவில்லை என்று குறித்த நால்வரும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு வாரத்திற்கு 50 டொலர்கள் வழங்கப்படுகின்றன எனினும், அவர்கள் ருவாண்டாவில் தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

பிரித்தானியாவில் இருந்து ருவாண்டா அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்: திறந்த சிறை எனும் ஈழத்தமிழர்கள் | Uk Sending Sri Lanka Tamil Refugees To Rwanda

தாம் நான்கு பேரும் தெருவில் துன்புறுத்தல் மற்றும் தேவையற்ற தவறான முறைக்கு உட்படுத்தப்படல் போன்று இன்னல்களை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர். அத்தோடு  தம்மை பொறுத்தவரையில் தாம் "சுய சிறையிலடைக்கப்பட்டவர்கள்" என்று குறித்த நால்வரும் கூறியுள்ளனர்.

வெளியே செல்ல மிகவும் பயமாக உள்ள நிலையில் தமக்கு நிரந்தரமாக இங்கிலாந்தில் வாழ்வதற்கு இடம் கிடைக்கும் என்று காத்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் தவறான முடிவு முயற்சிகளுக்குப் பின்னரே இந்த நான்கு இலங்கைத் தமிழர்களும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டனர்.

திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவர்கள்: தமிழ் பாடசாலையில் சம்பவம்

திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவர்கள்: தமிழ் பாடசாலையில் சம்பவம்

இராணுவ மருத்துவமனை

அவர்கள் இப்போது இராணுவ மருத்துவமனையில் இருந்து வெளியேறி, தலைநகர் கிகாலியின் புறநகரில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில், பிரித்தானிய அதிகாரிகளால் பணம் செலுத்தப்படும் குடிமனையில் வாழ்கின்றனர்.

இலங்கையில் சித்திரவதை மற்றும் தகாத முறைக்கு ஆளானதன் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்கு (Canada) செல்ல முயற்சித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து ருவாண்டா அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்: திறந்த சிறை எனும் ஈழத்தமிழர்கள் | Uk Sending Sri Lanka Tamil Refugees To Rwanda

இந்த புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களில் மூன்று பேரில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உள்ளடங்குகிறார் நான்காமவர் குறித்த பெண்ணின் தந்தையாவார் அத்தோடு தமது மகளுடன் ருவாண்டாவில் தங்கியிருக்க அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கும் (England) ருவாண்டாவுக்கும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் இந்த இலங்கை தமிழர்கள் ருவாண்டாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையிலும் டியாகோ கார்சியாவிலும் தாம் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த தமிழ் பெண் கூறியுள்ளதுடன் ருவாண்டாவில் தமக்கு தொந்தரவுகள் இருக்கின்றபோதும், காவல்துறையினரின் உதவிக்கு அணுகவில்லை என்று குறிப்பிட்ட அவர்கள், தகாதமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சீருடை அணிந்த சட்ட நடைமுறைப்படுத்தலை நம்பவில்லை என்று கூறியுள்ளனர்.

இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

புலம்பெயர்ந்த தமிழர்கள்

எனினும், டியாகோ கார்சியா முகாமில் இருந்ததை விட ருவாண்டாவில் தங்களின் வாழ்க்கை நிலைமை சிறப்பாக இருப்பதாக கார்திக் மற்றும் லக்சானி என்ற பெயர்களை கொண்ட இந்த இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தவறான முடிவு முயற்சியைத் தொடர்ந்து டியாகோ கார்சியாவிலிருந்து விமானம் மூலம் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது தமிழர், இன்னும் இராணுவ மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து ருவாண்டா அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்: திறந்த சிறை எனும் ஈழத்தமிழர்கள் | Uk Sending Sri Lanka Tamil Refugees To Rwanda

இதேவேளை, தாம் இலங்கைக்கோ இங்கிலாந்துக்கோ செல்லமுடியாது என்றநிலையில், ருவாண்டாவில் இருக்க விரும்பவில்லை என்றால்,பாதுகாப்பான மூன்றாவது நாட்டில் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரை டியாகோ கார்சியா முகாமுக்குத் திரும்பலாம் என்று அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இலங்கையர் குழுவினரை நிரந்தரமாக மீள்குடியேற்ற ருவாண்டா "பாதுகாப்பான மூன்றாவது நாடாக" கருதப்படுகிறதா என்ற சர்வதேச ஊடக கேள்விகளுக்கு இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலகம் பதிலளிக்கவில்லை.

இது இவ்வாறிருக்க மேலும் சுமார் 60 இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்னும் டியாகோ கார்சியா தீவில் தங்கியுள்ள நிலையில், நாங்கள் டியாகோ கார்சியாவிற்கு வந்தபோது தங்கள் உயிரைக் காப்பாற்றியதற்காக பிரித்தானியாவுக்கு நன்றி சொல்ல வேண்டுமா அல்லது எங்கள் வாழ்க்கையை முடக்கியதற்காக அவர்களுடன் கோபப்பட வேண்டுமா என்று ருவாண்டாவில் வசிக்கும் மயூர் என்பவர் அவரின் ஆதங்கத்தை சர்வதேச ஊடகத்திடம் வெளிப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020