பிரித்தானிய குடும்ப விசா தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்
குடும்ப விசாவில் குடும்ப உறுப்பினருக்கு நிதியுதவி வழங்குவதற்கான குறைந்தபட்ச வருமானத் தேவையை உயர்த்துவதற்கான திட்டங்களை பிரித்தானிய (United Kingdom) அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறைந்தபட்ச ஆண்டு வருமான விதியானது, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக்கினால் (Rishi Sunak) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரால் (Keir Starmer) குறி்த்த திட்டமானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம்
இதற்கமைய, பிரித்தானியாவின் நிரந்தர குடியிருப்பாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதற்கு இனி வருடத்திற்கு குறைந்தபட்சம் 38,700 பவுண்ஸ்களை செலவிட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னதாக இருந்த ஆண்டு வருமான வரம்பில் எந்த அதிகரிப்பும் இப்போதைக்கு ஏற்படுத்தப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரித்தானியாவில் தற்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரத் தேவையான ஆண்டு வருமானம் என்பது 29,000 பவுண்ஸ், அதாவது இலங்கை ரூபாப்படி 1.11 கோடிகள் என தெரியவந்துள்ளது.
குடியிருப்பு ஆலோசனை
எனவே, இதனை உயர்த்துவதன் மூலம் குடும்பங்களின் மீது ஏற்படும் தாக்கத்தை, குடியிருப்பு ஆலோசனை குழு (MAC) பரிசீலிக்கும் வரை, வரி அதிகரிக்கப்பட மாட்டாது என பிரித்தானிய உள்துறை செயலர் எவெட் கூப்பர் (Yvette Cooper) அறிவித்துள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மார்ச் வரையிலான கால கட்டத்தில் மாணவர்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |