பிரித்தானிய விசா மோசடிகள்: உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
United Kingdom
By Sathangani
பிரித்தானியாவிற்கு விசா சேவைகளை வழங்குவதாக கூறி போலி முகவர்கள் மோசடி செய்துள்ளதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
போலி முகவர்கள் பிரித்தானியா விசா செயல்முறையை விரைவுபடுத்த முடியும் என்று கூறலாம் அல்லது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் கேட்கலாம் என தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் அவதானமாக இருக்கவேண்டும்
இதனையடுத்து மூன்றாம் தரப்பு மூலம் தங்கள் விசா விண்ணப்பங்களை மேற்கொள்பவர்கள் குறித்த தரப்பினர் நம்பத்தகுந்தவர்களாக என்பதை உறுதிப்படுத்துமாறு உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது.
மேலும் விசா விண்ணப்ப செயன்முறைகளை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |