போரில் இருந்து மாணவர்களை பாதுகாக்க உக்ரைனின் புதிய திட்டம்
Russo-Ukrainian War
Ukraine
World
Russia
By Dhilak
உக்ரைன் மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் நிலக்கீழ் பாடசாலைகளை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
கடந்த 20 மாதங்களாக தொடர்ந்து ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டு வருகின்றமையால் மாணவர்களை பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு நகரான கார்கில் இல் இந்த பாடசாலை அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
புதிய கல்வி முறைகள்
மேலும், பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய நவீன வேலைதிட்டங்களை மேற்கொண்டு இந்த பாடசாலைகளை அமைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் காரணமாக உக்ரைனிய மாணவர்களின் கல்வி நிலை பாரியளவு பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இவ்வாறான புதிய கல்வி முறைகள் ஆரம்பிக்கவுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.