மீண்டும் ஆட்சி கவிழ்ப்புக்கு தயாராகும் வாக்னர் படை - புடின் எடுத்த அதிரடி முடிவு
ரஷ்யாவின் கூலிப்படையினர் என அழைக்கப்படும் வாக்னர் படையினர் மீண்டும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என அச்சம் நிலவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்த 72 மணி நேரத்தில் வாக்னர் கூலிப்படையில் மீதமிருப்போர் கொல்லப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு உருவாகியுள்ளது.
தங்கள் தலைவரான பிரிகோஜின் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பழிக்குப் பழி வாங்க இருப்பதாக மீதமிருக்கும் வாக்னர் குழுவினர் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
புடின் தக்க நடவடிக்கை

அதன்படி அவர்கள் விரைவில் மீண்டும் ரஷ்யாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த தகவல் வெளியானதுமே புடின் விரைவாக தக்க நடவடிக்கை எடுக்கக்கூடும் என அமெரிக்க முன்னாள் ராணுவ உளவுத்துறை அலுவலரான Matt Shoemaker தெரிவித்துள்ளார்.
அதனால், அடுத்த 72 மணி நேரத்தில், மீதமிருக்கும் வாக்னர் குழுவினருக்கு ஆபத்து என்று கூறியுள்ள அவர், குழுவில் மீதமிருக்கும் மற்றவர்களும், வழக்கம் போல தற்கொலை, அல்லது ஜன்னலிருந்து விழுந்து உயிரிழக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 16 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்