ரஸ்யாவிற்கெதிரான தடைகளுக்கு இலங்கை ஆதரிக்காது: ரஷ்யாவுக்கான தூதுவர் உறுதிமொழி
Russo-Ukrainian War
Sri Lanka
Russia
By pavan
ரஷ்யாவுக்கு இலங்கை தொடர்ந்தும் நட்பு நாடாகவே இருப்பதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய - இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் போதே, ஜனித்த லியனகே இதனைக் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நெருக்கடியான காலப்பகுதியில் ரஷ்யா வழங்கிய உதவிகளையும் ஆதரவுகளையும் சிறிலங்கா அரசாங்கம் நினைவில் கொண்டிருப்பதான ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்கள்
இந்த நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இலங்கை ஆதரிக்காது என அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே, ஜனித்த லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி