அநுரவுக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பியதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பதிவை அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
அதில், பரஸ்பர மரியாதை, அமைதி மற்றும் செழிப்புக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை உக்ரைன் மதிக்கிறது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இருநாட்டு உறவுகள்
மேலும், இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தரும் வகையில், தனது உறவுகள் மேலும் வளர்ச்சியடையும் திறன் கொண்டவை என்று நம்புவதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
I thank President @anuradisanayake for the warm and sincere greetings on Ukraine’s Independence Day. Ukraine values the friendly relations and cooperation with Sri Lanka, based on mutual respect and a shared commitment to peace and prosperity. We are confident that our relations… pic.twitter.com/3SzKMJuG3y
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 24, 2025
இதேவேளை, உக்ரைன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பும் ஒத்துழைப்பும் இரு நாட்டு மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக மேலும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்பார்ப்பத்தாக கூறியுள்ளார்.
அத்தோடு, தற்போது உக்ரைன் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிரமங்கள் விரைவில் தீர்க்கப்பட்டு, நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை மீட்டெடுக்கப்படும் என்பது தனது உண்மையான நம்பிக்கை" என்றும் ஜனாதிபதி அநுர தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

