ரஷ்யாவுடனான போர் : உக்ரைன் வீரர் படைத்த உலக சாதனை
Russo-Ukrainian War
Ukraine
By Sumithiran
13,000 அடி (கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர்) தூரத்தில் இருந்த 2 ரஷ்ய வீரர்களை Sniper துப்பாக்கியால் சுட்டுக் கொன்று ரஷ்யாவுடன் நடந்து வரும் போரில் உக்ரைனிய வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.. இதை உக்ரைன் செய்தித்தாள் கீவ் போஸ்ட் தெரிவித்தது.
இந்த சம்பவம் ஓகஸ்ட் 14 அன்று போக்ரோவ்ஸ்க் பகுதியில் நடந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'அலிகேட்டர் 14.5 மிமீ' Sniper துப்பாக்கியால் 2 ரஷ்ய வீரர்களை அவர் கொன்றார்.
இதை வெற்றிகரமாகச் செய்ய செயற்கை நுண்ணறிவு மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சாதனை மற்றொரு உக்ரைன் வீரர் வசம் இருந்தது. 12,400 அடி தூரத்தில் இருந்து ரஷ்ய வீரர் ஒருவரை அவர் சுட்டுக் கொன்றிருந்தார். தற்போது அந்த சாதனையை மற்றொரு உக்ரைனிய வீரர் முறியடித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்