உக்ரைன் படைகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த புடின்
உக்ரைன் (ukraine)படையினர் தமது படைவீரர்களிடம்சரணடைந்தால், நாங்கள் அவர்களின் உயிரை காப்பாற்றுவோம்' என ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்(viadimir putin) உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புடினுடன் நடத்தப்பட்ட பயனுள்ள கலந்துரையாடல்
ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் நாங்கள் மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தினோம். மேலும் இந்த கொடூரமான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
ஆனால், இந்த நேரத்தில், ஆயிரக்கணக்கான உக்ரைன் பாதுகாப்பு படையினர் ரஷ்ய இராணுவத்தால் முழுமையாக சூழப்பட்டுள்ளனர். மிகவும் மோசமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். அவர்களின் உயிர்களைக் காப்பாற்றுமாறு புடினிடம் நான் கேட்டுக் கொண்டேன்.
உக்ரைன் படையினர் சரணடைந்தால், உயிரை காப்பாற்றுவோம்
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத ஒரு பயங்கரமான படுகொலையாக இருக்கும். அவர்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, 'உக்ரைன் படையினர் சரணடைந்தால், நாங்கள் அவர்களின் உயிரை காப்பாற்றுவோம்' என ரஷ்ய ஜனாதிபதி புடின் உறுதி அளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்