ரஷ்யாவின் மற்றுமொரு கொடூர முகம்: ஐ.நா முன்வைத்த கடும் குற்றச்சாட்டு
ரஷ்யா (Russia), உக்ரைன் (Ukraine) மக்கள் மீது பாலியல் தொந்தரவுகளை மேற்கொண்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்ய அதிகாரிகள் ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வருகின்றது.
வான்வழித் தாக்குதல்
இதனடிப்படையில், உக்ரைன் மீதான ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் ஒரே இரவில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் பல உக்ரைன் ட்ரோன்கள் தலைநகர் மாஸ்கோவை குறிவைத்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா தனது படையெடுப்பை நிறுத்தாததற்காக அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றார்.
ட்ரோன் தாக்குதல்
இந்தநிலையில், ரஷ்யா ஒரே இரவில் உக்ரைன் மீது மூன்று ஏவுகணைகள் மற்றும் 115 ட்ரோன்களை ஏவியது என்று கியேவின் விமானப்படை தெரிவித்துள்ளது.
பெரும்பாலான ட்ரோன்கள் வான் பாதுகாப்பு மூலம் இடைமறிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யா மீது நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் முடுக்கிவிட்டுள்ளது.

பருத்தித்துறைக்கு வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி : பட்டாசு கொளுத்திய இளைஞன் காவல்துறையால் கைது
ரஷ்ய அதிகாரிகள்
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ரஷ்ய அதிகாரிகள் தாங்கள் ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளில் மக்களை பாலியல் தொந்தரவு உட்பட சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.
பெப்ரவரி 2022 இல் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, ரஷ்யா சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்களின் தொடர்ச்சியாக உக்ரைன் மக்களை கைதிகளாக வைத்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
