இலங்கை மீது ஐ.நா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு : வெளியான அறிக்கை
இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்களை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கும் அல்லது நீதித்துறை கட்டமைப்பிற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கும் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
முறையான சட்டக் கட்டமைப்பு
இலங்கையில் மோதல் தொடர்பான பாலியல் துன்புறுத்தல்கள் தற்போதும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இத்தகைய சம்பவங்களை எதிர்கொள்ளும் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை அமைதியாக சகித்துக்கொண்டிருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மோதல் தொடர்பான பாலியல் துன்புறுத்தல்களைக் கையாள்வதற்கு முறையான சட்டக் கட்டமைப்பு இருப்பது அவசியமாகும்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பது ஒரு கட்டாய இலக்காக இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |