இலங்கைக்குள் ஐ.நா பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக நுழையலாம்! அள்ளிச் செல்லப்பட்ட ஆவணங்கள்
சனல் 4 ஆவணப்பட விவகாரத்தில் குறிப்பிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விடயங்கள் உள்ளிட்ட அனைத்து அறிக்கைகளும் சர்வதேச புலனாய்வாளர்களினால் ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் உலகளவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 ஆவணப்படத்தில் காணப்படும் விடயங்களில் சில இலங்கையில் படமாக்கப்பட்டதினை எடுத்துக்காட்டுகிறது.
இந்த விடயம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே இந்த விடயத்தினை தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் இந்திய புலனாய்வு துறை எந்தளவு தனது ஊடுருவலை மேற்கொள்கின்றதோ அதே போன்ற ஒரு ஊடுருவலை சர்வதேச புலனாய்வு பிரிவும் மேற்கொள்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் புலனாய்வு விடயங்களில் சர்வதேச ஊடுருவல்கள் குறித்தும், சனல் 4 ஆவணப்பட பின்னணி குறித்தும் வருகிறது இன்றைய ஊடறுப்பு