ஹீனட்டியன மகேஷின் உதவியாளர் கைது: ஆயுதங்களும் மீட்பு!
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான 'ஹீனட்டியன மகேஷின் உதவியாளரான ஜிங்கா எனப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், அதன் மெகஸினும், 25 T56 ரகத் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணை
இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், மினுவாங்கொடை, அங்கொடை, ஹீனட்டியன மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளில் ஹீனட்டியன மகேஷ் என்ற பெயரில் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களிடமிருந்து இலஞ்சம் வசூலித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பிரதேசவாசிகள் பெரும் அச்சத்தில் இருந்துள்ள நிலையில் காவல்துறையில் எவ்வித முறைப்பாடுகளும் வழங்கப்படாத காரணத்தினால் காவல்துறையினர் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |