சிறிலங்கா இராணுவமுகாமிலிருந்து காணாமற்போன துப்பாக்கியால் பல படுகொலைகள் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்
மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக்கவின் மாமனார் உட்பட தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல கொலைகளுக்கு கரந்தெனிய இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்ட T-56 துப்பாக்கியை பாதாள உலகக் குழுக்கள் பயன்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கரந்தெனிய இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த T-56 துப்பாக்கி உட்பட பல மகசீன்கள் காணாமல் போயுள்ளதுடன், இது தொடர்பில் கரந்தெனிய காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
களஞ்சியசாலையிலிருந்து காணாமற்போன துப்பாக்கி
இந்த ஆயுதக் களஞ்சியத்தின் பாதுகாவலரை இராணுவ காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், சந்தேக நபர் எதிர்வரும் நாட்களில் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

கரந்தெனிய ஆயுதக் களஞ்சியசாலைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சில T-56 மகசீன்கள் இராணுவ காவல்துறையினரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர விசாரணையில் காவல்துறையினர்
இந்த ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து காணாமல் போன ரி-56 துப்பாக்கி, மக்களைக் கொல்வதற்காக பாதாள உலகக் குழுவினருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக்கவின் மாமனாரின் பல கொலைகள் உட்பட தெற்கில் இடம்பெற்ற பல கொலைகளுக்கு பாதாள உலகக் கும்பல்களால் இந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் சந்கேம் வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பாக, தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன், காணாமல் போன ஆயுதத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.