வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் ஆர்பாட்டம்
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் இன்றைய தினம் (11.08.2025) இடம்பெற்றுள்ளது.
சுமார் அரை மணி நேரம் கல்வி அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் பின்னர் பேரணியாக சென்று பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலையற்ற பட்டதாரி
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்திற்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொண்டிருந்த கொள்கையினையும், வாக்குறுதிகளையும் தற்போது மீறியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
தற்போது நாடு முழுவதும் சுமார் 35,000 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாகவும், கொள்கை பிரகடன அறிக்கை மூலம் இந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் அதனை மீறியுள்ளதாக அவர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
